வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

விண் தோன்றிய போதே....

விண் தோன்றிய போதே....
================================ருத்ரா

இது
சூப்பர் நோவா எனும்
புத்தொளியின் படம்.
ஒரு விண்மீன் தொகுதியை
(காலக்ஸி)ப்போல‌
பல நூறு கோடி மடங்கு
விரியும்போது தான்
புதிய‌ விண்வெளியின்
வ‌யிறு திற‌க்கிற‌து.
சாதார‌ண‌ சிறு விண்மீன்க‌ள்
ஹைட்ர‌ஜ‌ன் ஹீலியங்களை ம‌ட்டுமே
த‌ன் கொல்ல‌ம்ப‌ட்டறையில்
அடித்து உருக்கி வார்க்கிற‌து.
ஆனால்
இந்த‌ "பிர‌ப‌ஞ்ச‌வெளியிய‌லை"
இவ்வ‌ள‌வு துல்லிய‌மாக‌
அறிந்து கொண்ட‌
ம‌னித‌ அறிவு தோன்ற‌க்கார‌ண‌மான
கனமான மூல‌ப்பொருள்க‌ள்
(கார்ப‌ன் போன்ற‌ க‌ரிப்பொருள்க‌ள்)
குமிழியிட்ட‌து
இந்த‌ புத்தொளி மீன்
வெடிப்பின் சித‌ற‌லில் தான்.
விண்தோன்றிய‌ போதே
ந‌ம‌க்குத்தெரிந்த‌
விஸ்வ‌ரூப‌ம் இது தான்.
"ம‌னித‌னின் முத‌ல் விஸ்வ‌ரூப‌ம் இது"
ம‌னிதனே அப்புற‌ம்
க‌ட‌வுளின் விஸ‌வ‌ரூப‌ம் ப‌ற்றி
க‌ருத்து விதைத்தான்.
க‌ல் தோன்றி ம‌ண் தோன்றும்
முன்ன‌ரேயே
"விண்தோன்றியாய்"
விந்தை காட்டிய‌வ‌ன் ம‌னித‌ன்.
இந்த‌ தெளிவு வ‌டிவே
ம‌னித‌ம் எனும் ம‌ல‌ர்ச்சியின்
ஒளிவு வ‌டிவ‌ம்.

======================================






Attachments (1)


supernova.jpg
323 KB   View   Download


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக