சனி, 13 ஆகஸ்ட், 2016

அது இன்னும் தாகம்








அது இன்னும் தாகம்
==========================================ருத்ரா இ.பரமசிவன்.

அது
துணியா ?
கயிறா ?
வர்ணங்களா ?

அது
கயிற்றில்
உயிர் விட்ட
தியாகிகள்..

அது
அவர்கள்
உடல் கிழிந்த துணியில்
தைத்த கொடி!

அது
அவர்களின்
ஆளுமை வர்ணங்கள்.

அது
அடையாளம் அல்ல.

அது
சடங்குகள் அல்ல.

அது
சாதி தீட்டுக்கு
தெளிக்கும்
கங்கா  ஜலம் அல்ல

அது
உசத்தி ஜலதித ரங்கா!

அது
நம் வேர்வைக் கடலின்
அலை த்துடிப்புகள்.

அதனால்

அது
அந்த முதலைகள் அல்ல.

அது
மணல் விழுங்கிகள் அல்ல.

அது
மலைத் தின்னிகள் அல்ல.

அது
மரங்களின் கோடரிகள் அல்ல.

அது
ஆறுகளை மறிக்கும் அரக்கன்கள் அல்ல .

அது
வாக்குப்பெட்டிக்குள்
சுருண்டு கிடக்கும்
அனக்கோண்டாக்கள் அல்ல.

அது
கரன்சிக்கரையான்களால்
அரிக்கப்பட்ட
ஓட்டுக்கள் அல்ல.

பின் என்ன தான் அது?


அதுவே நாம்.
நாம் தான் அது!

நாம்
என்றைக்காவது
இந்த அநியாயங்களின் மீது
உமிழும் "லாவாவின்"
நாவுகள் அவை !

அவை அசையட்டும்.
அவை
வெறும் முண்டைக்கண்  "நம்பர்"கள்
துருத்திக்கொண்டிருக்கும்
காலண்டர்  தாள்கள் அல்ல.

அந்த "ஆகஸ்டு பதினைந்து"
இன்னும் நம் தாகம் !
இன்னும் நமக்குள்
குமிழ்க்கப்போகும்
உயிர்!

அந்த நாவுகள் அசையட்டும்!
ஜெய்ஹிந்த்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக