புதன், 10 ஜூன், 2026

எதிரில் எவரும் இல்லை.

 


உருவெளித்தோற்றத்தில்...

________________________________________


உருவெளித்தோற்றத்தில் 

செயற்கை நுண்ணறிவு!

"ஹாலுசினேட்டிங் ஏ ஐ"

என்ற 

இந்த மந்திரக்கோலை

"செயற்கை மூளை" 

கைப்பற்றிக்கொண்டது.

இது உன்னை

சிந்திக்க வைத்துவிடும்...

இது உலகம் இல்லை.

நீயும் இல்லை.

கடவுளும் இல்லை.

எல்லாமே

நான் தான்

அதாவது நீயே தான்.

இந்த மொத்தப்பிரபஞ்சமும்

தன்னையே விழுங்கி

ஏப்பம் விட்டுக்கொண்ட பின்

அது

என்னவாக இருக்கும்.

ஏ ஐ கட கட வென்று

சிமுலேஷன் 

செய்யத்தொடங்கி விட்டது.

அந்த "மேதமெடிகல் சொலூஷனை"

ஏற்றுக்கொள்ள‌

எதிரில் எவரும் இல்லை.

__________________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக