விமர்சனத்தின் விமர்சனம்.
___________________________________________________
(ரியாஸ் குரானாவின் சினிமா விமர்சனத்தைப்
பற்றிய கவிதை இது.)
___________________________________________________
பாப் கார்ன் கொறித்தல்களே
மிச்சம் என்று
தள்ளிவிடமுடியுமா
நம் சினிமாக்களை.
இதோ யதார்த்த கத்தி கொண்டு
அறுவை சிகிச்சை தந்திருக்கின்றேனே
அந்த நம் சமுதாயத்தின்
எலும்பு மிச்சங்களைப்பற்றி
என்ன நினைக்கிறீர்கள்.
எது எப்படியாயினும் நம்
வெளிச் சாக்கடைகளின் முடை நாற்றங்களை
முட்டையிட்டு
குஞ்சு பொரிக்கும்
இந்த சிறகு விரிப்புகளின்
இருட்டில்
எல்லா வெளிச்சமும்
கரைந்தே தான் காணாமல்
போய்விட்டது.
_______________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக