சனி, 27 ஜூன், 2026

பாக்கியராஜ் எனும் திரைக்கதை மன்னன்

 



பாக்கியராஜ் எனும்
திரைக்கதை மன்னன்
இயக்குனர்களின் சக்கரவர்த்தி
நகைச்சுவையுடன்
விறு விறுப்பான க‌தைகளை
திரையில்
படைத்த மிகச்சிறந்த படைப்பாளி.
இவரது படங்களை வைத்து
தோரணமாக ஒரு மாளிகை செய்தால்
அதுவே
மிகச்சிறந்த படங்களின் நூலகக்களஞ்சியம்
ஆகி விடும்.
முந்தானை முடிச்சு...
கிராமத்துக்கதையில்
காதலைக்காட்டியிருக்கும் விதம்
மிக மிக அருமை.
இவருக்கு பெரிய பெரிய நடிகர்கள்
தேவையில்லை.
"தவக்களை" நண்டு தப்பளக்கா என்று நாம்
செல்லமாக அழைக்கும் குட்டி நடிகர்களை
வைத்துக்கொண்டு
தூள் கிளப்புவார்.
கனமான சோகம் ததும்பும்
காட்சிகளையும் மிகச்சிறப்பாக‌
நிமிர்த்திக்காட்டுவார்.
அவர் எடுத்த படங்கள் எல்லாவற்றிலும்
எதை விடுவது என்ற பேச்சுக்கே
இடமில்லை.
தாவணிக்கனவில்
நடிகர் திலகத்தையே அற்புதமாக‌
"கவாத்து வாங்கியிருப்பார்.
சுவர் இல்லாத சித்திரங்களில்
வெறும் பாழடைந்த சுவர்கள் கூட‌
கண்ணீர் மழையில் கரைந்தே போய்விடும்.
அந்த ஏழுநாட்களில்
தாலி செண்டிமெண்டில் அவர்
ஊஞ்சலாடிய போதும்
அவர் பேசும் வசனங்கள்
நகைச்சுவையில் தோய்த்த‌
வைர ஊசிகள்.
குறும்படங்கள் என்று இன்று
நூற்றுக்கணக்கான படங்கள் வெளி வந்து விட்டன,
மொத்த குறும்படங்களின்
ஒரு பிரம்மாண்ட பல்கலைக்கழகமே
இவரது திரைப்படங்கள்.
இது நம்ம ஆளு வில்
அக்ரஹாரத்துக்கும் அழுக்கான சேரிக்கும்
நடுவே ஒரு மெல்லிய நூல்பிடித்து
காதலை தேரோட்டும் கதையில்
நூலே வடம்பிடித்து கலகலப்பாய்
நகர்ந்திருப்பது மிக அருமை.
இன்று போய் நாளை வா
என்ற திரைப்படம்
இவரது "மாஸ்டர்பீஸ்".
அதில் இவர் சிரிக்காமலேயே நம்மை
குபீர் குபீர் என்று
சிரிக்க வைத்திருக்கிறார்.
அதிலும் அந்த இந்தி வாத்தியாரின்
ஏக் காவ் மே..ரஹ்த்தா தா..
என்று அழுத்தி அழுத்தி உச்சரிக்கும் காட்சியில்
வெடிச்சிரிப்பு தான்.
காதலிக்க வேண்டுமென்றால்
இந்தி வாத்தியார் காலையும் பிடிக்கலாம்
என்ற ஊசிப்பட்டாசு நகைச்சுவை
மிக அருமை.
எங்கள் ரசிப்பின் மூலை முடுக்கெல்லாம்
விரவி நின்று பரவி நின்று
பங்கெடுத்துக்கொண்ட கலைப்பெட்டகமே!
இன்றுபோய்
நாளை வருவாயா?
மரணம் கூட சிரித்துக்கொண்டே
அழுகின்றது.
________________________________________________
சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக