திங்கள், 8 ஜூன், 2026

எங்கள் அன்புக்குரிய திரு மனுஷ்யபுத்ரன் அவர்களே

 


எங்கள் அன்புக்குரிய திரு மனுஷ்யபுத்ரன் அவர்களே


எழுத்துக்கள் எனும் உற்சாகக்குன்றில்

நீங்கள் உருண்டு புரண்டு கொண்டிருப்பதாகத்தான்

உணர்கின்றோம்.

உங்கள் எழுத்தின் கூர்முனையில்

இமயச்சிகரங்களை ஏற்றி "ஜிம்னாஸ்டிக்" செய்யும்

திறமையின் ஒளியில் தான் நாங்கள்

உங்களை கண்டுகொண்டிருக்கிறோம்.

உங்கள் கவிதைகள் எப்போதும்

வலிகளை புலம்பியதில்லை.

வானத்தில் எங்கோ மிதக்கும்

சிறு தூவிகளில் நீங்கள் அற்புத சிறகை விரித்து

சூரியனுக்கு வெயில் படாமல்

குடை பிடித்தது போன்ற‌

பெரு மானிட நேசத்தை வரிகளாக்கியிருக்கிறீர்கள்.

அவை போன்ற எழுத்துப்பிரவாகம்

உங்களை முட்டித்திமிறிக்கொண்டு

வர இருப்பதாகத்தான் காண்கிறோம்.

நீங்கள் எங்களை உற்சாகமூட்டும்

கவிதையின் நிலுவைகளை உங்கள் பக்கம்

மூட்டை கட்டி வைத்திருக்கிறீர்கள்.

அவற்றை அன்புடன் பிரித்து எங்களுக்கு

களிப்பு தர கொடுக்க இருக்கிறீகள்

என்ற 

உற்சாகத்தோடு எங்களை உங்களுடன்

பகிர்ந்து கொள்கிறோம்.

ஒய்வுடன் கவிதையாக பேசிக்கொண்டிருங்கள்.

அன்புடன் சந்திக்கலாம்.

______________________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக