துளிர்க்கும் என்று.....
____________________________________
கை பேசியில்
கை மட்டும் தான்
கிளிக் பண்ணி பேசுகிறது.
கணிப்பொறி யுகம் என்றாலும்
மூளையும் சிந்தனையும்
கையில் இருந்து இழையுமா என்ன?
கருவியின் பாட்டரிக்குள்
அவன் சிந்தனையின் கர்ப்பம் இருக்கிறது.
மனிதன் எந்திரமாய் ஆகி விடுகிறான்.
அவனது இன வரலாறு மொழி வரலாறு
மற்றும் சமுதாய ஆற்றோட்டங்கள எல்லாம்
அற்றவனாய்
பாலைத்திணையில் மட்டுமே பேசுகிறான்.
சினிமா எனும் அந்த "சஹாரா"வில்
கானல் நீர்க்காட்சிகளின்
நிழல்களாய் மாறிப்போகிறான்.
உயிரற்ற உணர்வற்ற அந்த வெறுமையின் கொடூரம்
அவன் அரசியலில் "மானுடம்" எனும்
ஈரப்பசையையே இல்லாமல் ஆக்கி விட்டிருக்கிறது.
கணிப்பொறிக்குள் மனிதன் புகுந்தபின்
"பெரும் பூதமாகி"ப்போனான்.
இனியும் ஒரு பசுமையும் உயிர்மையும் கலந்த
அரசியல் இங்கே தோன்றுமா?
"கட் அவுட்"உலகங்களின் கனவுக்கூச்சல்களில்
மனித சிந்தனையின் கீற்றுகள் துளிர்க்குமா?
நம்புவோம்.
கை பேசியில்
கை மட்டும் தான்
கிளிக் பண்ணி பேசுகிறது.
கணிப்பொறி யுகம் என்றாலும்
மூளையும் சிந்தனையும்
கையில் இருந்து இழையுமா என்ன?
கருவியின் பாட்டரிக்குள்
அவன் சிந்தனையின் கர்ப்பம் இருக்கிறது.
மனிதன் எந்திரமாய் ஆகி விடுகிறான்.
அவனது இன வரலாறு மொழி வரலாறு
மற்றும் சமுதாய ஆற்றோட்டங்கள எல்லாம்
அற்றவனாய்
பாலைத்திணையில் மட்டுமே பேசுகிறான்.
சினிமா எனும் அந்த "சஹாரா"வில்
கானல் நீர்க்காட்சிகளின்
நிழல்களாய் மாறிப்போகிறான்.
உயிரற்ற உணர்வற்ற அந்த வெறுமையின் கொடூரம்
அவன் அரசியலில் "மானுடம்" எனும்
ஈரப்பசையையே இல்லாமல் ஆக்கி விட்டிருக்கிறது.
கணிப்பொறிக்குள் மனிதன் புகுந்தபின்
"பெரும் பூதமாகி"ப்போனான்.
இனியும் ஒரு பசுமையும் உயிர்மையும் கலந்த
அரசியல் இங்கே தோன்றுமா?
"கட் அவுட்"உலகங்களின் கனவுக்கூச்சல்களில்
மனித சிந்தனையின் கீற்றுகள் துளிர்க்குமா?
நம்புவோம்.
மீண்டும் துளிர்க்கும் என்று
நம்புவோம்.
________________________________________________________
சொற்கீரன்
+
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக