வெள்ளி, 26 ஜூன், 2026

திரு ரியாஸ் குரானா அவர்கள் படைத்த‌ ஒரு "சொற்றுலா" .

 சமுதாயக்காடு நுழைந்து வருவது பற்றி

திரு ரியாஸ் குரானா அவர்கள் படைத்த‌

ஒரு "சொற்றுலா" பற்றியது இது.

_____________________________________________


சமுதாய உளவியலில்

நுண்ணோக்கி நுவலும் 

எழுத்துச்சிற்பியே!

ரியாஸ் குரானா அவர்களே.

அக்கறையோடு பேசி

பிறகு அதிலேயே

அக்கரை இக்கரையாக நின்று

நம்மை நோட்டமிடும் 

மனிதர்களை அற்புதமாக‌

"படம் வரைந்து பாகம் குறித்திருக்கிறீர்கள்!"

சில மனிதர்கள் நிறங்கள் காட்டுவதில்

பச்சோந்திகள் கூட தோற்றே போகும்.

எப்படியோ தோதாக வாழைப்பழத்தோடு தான்

போவோம்...

அவர்கள் "வக்கணையாய் அதில் ஊசியேற்றி"

உள்ளுக்குள் ஆனந்தக்கூத்தாடுவார்கள்.

நண்பராயிற்றே என்று தான்

முகத்தாட்சண்யம் பார்ப்போம் நாம்.

கிடைத்தது தோள் என்று

நம்மீது சவாரி செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

அப்புறம் நாம் சிந்துபாத்து

அவரோ "கடற்கிழவர்" தான்.

நாம் அந்த வட்டாரத்தை விட்டு

அகலும் வரை அந்த "சொற்சுமை" தாங்காமல்

சோர்ந்தே விடுவோம்.

நீங்கள் எழுதியது நீண்டதொரு காவியம்.

எந்த வகை என்றாலும் எலிப்பொறி ஒன்று தான்.

மசால் வடைகள் தான் வேறு வேறு.

பதிலே எதிர்பார்க்காமல் கேள்வி மழை

பொழிவோர்கள் ஒரு வகை.

என்ன கேள்வி? அதற்கு என்ன பதில்?

என்றெல்லாம் கவலை இன்றி

கேள்வியும் நானே பதிலும் நானே

என்று நம்மீது 

சொர்க்கவாசம் செய்து கொண்டிருப்பார்கள் 

அது ஒரு வகை.

இந்த நிலையில்

மக்களோடு நட்பு கொள்வது எப்படி என்று

ஒரு ஆயிரத்து சொச்சம் பக்கங்களில்

நான் எழுதிய நூல் பற்றி தெரியுமா உங்களுக்கு

என்று

அந்த பளபளப்பான பிளாட்டினம் கார்டு ஒன்றையும்

உங்களுக்கு நீட்டுவார்.

கவனம் கொள்வீராக.

_________________________________________________

சொற்கீரன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக