ஒரு பூனை கடந்து போகிறது
___________________________________________________
நம் தலைமுறையின் சிறந்த எழு த்தாளர்
திரு ரியாஸ் குரானா அவர்களின்
"புத்தகங்கள்"பற்றிய ஒரு சொற்சித்திரம்
கண்டு எழுதிய என் கவிதை .
-----------------------------------------------------------------------------
ஆம்.
48 மைல் நீள காகிதக்காடுகளில் கூட
எலி பிடிக்க முடியவில்லை அதனால்.
அருமை அருமை.
இந்த பூனைகளின் தொல்லைகள்
இன்னும்
தாங்கத்தான் முடியவில்லை.
அப்புறம் அந்த அபிமன்யு
வியூகங்களுக்குள்
புதைந்து போனதைப்போல
மவுனக்கிடங்கில்
கிடக்கிறது மகாபாரதங்களாய்....
சவக்காடுகளாய்.
மனிதனை ரத்த ஆறுகளில் கரைக்க
எத்தனை தேர்ச்சக்கரங்கள்..
மயில் இறகு கிரீடங்களோடு
புன்முறுவல் காட்டி
மனிதம் புதைகுழிக்குள் வீழ
எத்தனை எத்தனை தலையணைகள்
புத்தகங்களாய்
தூங்கியே இறந்து இறந்து
இந்த நூற்றாண்டுகளை விழுங்கித்தீர்த்தன.
ரியாஸ் குரானா அவர்களே..
புத்தங்களின் எழுத்துக்களைத் தின்ன
கரையான்கள் படையெடுத்திருக்கலாம்.
அங்கே கரையான்களே
எழுத்துக்களாய் மொய்த்திருந்தால்...
ஆம்
மானுடம் தொலைந்தது அப்படித்தான்.
_________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக