வியாழன், 11 ஜூன், 2026

மூவர் உலா

 

மூவர் உலா

______________________________


மூவரில் 

காமிரா மன்னர் 

ஒளிந்து கொள்ள போய்விட்டார்

இந்த கண்ணாமூச்சி விளையாட்டில்.

கவிச்சக்கரவர்த்தியோ

வழக்கத்திற்கு மாறான 

ஒரு ராமாயாணத்தை எழுதாமல்

விடுவதில்லை என்று

வீறு கொண்டு தான் இருக்கிறார்.

அந்த சம்புகனை மையமாக‌

வைத்து எழுதினால் என்ன?

பத்து தலைக்காரனை கொன்ற‌

பாவத்தை தீர்க்க‌

ராமேஸ்வரம் எல்லாம் போய் இருப்பதாக‌

சொல்கிறார்கள்.

இன்னும் ஒம்பது தலைக்கு

எங்கெல்லாம் போய் இருப்பதாக‌

சொல்லியிருக்கிறார்களோ.

அந்த "தவ சிரேஷ்டன்" சம்புகனைக்

கொன்ற பாவம் எல்லாம் கிடையாதா?

அவன் சூத்திரன் தானே.

சூத்திரர்களை எல்லாம் பிராமணர்கள்

விருப்பப்படி கொல்வது தானே

க்ஷத்ரிய தர்மம்.

பார்ப்போம் ஒரு "சம்புகாயணம்"

நமக்கு கிடைக்கலாம்.

சரி...அப்புறம்

பெருமைக்குரிய நம் ஞானி இருக்கிறார்.

72 மேளகர்த்தா மற்றும் அவற்றின்

ஜன்ய ராகங்கள் எல்லாம் கூட‌

அவரின் "நொடேஷன்களில்"

இசைப்பூக்களை சொரிந்து

அடர் மழை தந்து விடும்.

அவற்றுக்குள் கூட ராயல்டி பூச்சி புழுக்கள்

குடைச்சல் கொடுக்காதா என்ன?

இருப்பினும் அவர் இசை

ஆயிரக்கணக்கான வானப்படுதாகளைக்கூட‌

பொத்துக்கொண்டு

இனிமை அம்புகளின் மழை பொழியும்.

இவர்கள் வாழ்ந்து ஒளிகூட்டிய‌

நாட்களில் நாமும் 

இருந்து வெளிச்சத்தில் நனைந்து

திளைத்து இருந்திருக்கிறோம்.

நம் கோடி நன்றிகள் 

இவர்களுக்கு உரித்தாகுக!

____________________________________________

சொற்கீரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக