சனி, 20 ஜூன், 2026

"க்ராஸ்ஸின் தெயர் ஹார்ன்ஸ்"

 



ரியாஸ் குரானா அவர்களின் "பூங்கா விசித்திரங்கள்"

__________________________________________________________


பூங்காக்கள் அல்லது மரக்கூட்டங்கள்

உலகத்தின் நுரையீரல்கள்

என்றெல்லாம் நாம் ஓவியங்கள்

தீட்டிக்கொண்டிருக்கையில்

அந்த தூரிகைமயிர்களே

தங்கள் தலைமயிர்களை

பிய்த்துக்கொள்ளாத குறையாய்

சிந்தனையின் முட்டுச்சந்துகளில்

இரண்டு மான்கள் "க்ராஸ்ஸின் தெயர் ஹார்ன்ஸ்"

என்னும் 

நெருக்கடி ஒவியத்தை

வரைந்து கொண்டிருப்பதை

இத்தனை யதார்த்தமாய்

நம் மதிப்புக்குரிய 

திரு ரியாஸ் குரானா போல்

எவரும் திரையிட்டுக்காட்ட முடியாது.

"லவ் தை நெய்பர் அஸ் தை செல்ஃப்"

என்பது 

இன்னும் பல கோடி கோடி மைல்கள்

நமக்கு அப்பால் இருக்கிறது

என்பது மட்டுமே இப்போது நம்

மூளைக்குள் மசாலா தடவுகிறது!

_____________________________________________

சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக