"சொற்கள் ஏன் தற்கொலை செய்து கொண்டன"
இலங்கை எழுத்தாளர்
வாஃபா பருக்
அந்த தூக்குக்கயிற்றின்
கண்ணி முடிச்சுகளில் உட்கார்ந்து
சொற்களின்
தொண்டைக்குழிக்குள் இறங்கி
முக்குளித்து
பேனா நிப்புகளில்
துளிர்த்த சொற்றுளிகளில்
கசியும்
அர்த்தமின்மைகளையும்
வெற்று அலப்பறைகளையும்
செதுக்கித்தள்ளுகிறார்.
சொற்களின் மூளைச்செதில்களில்
புதிய சிந்தனைகளை
மூண்டெரியச்செய்கிறார்.
அந்தக் கத கதப்பில்
நாம் விறைத்துப்போகாமல்
மீண்டு நிற்கிறோம்.
___________________________________________________________
_சொற்கீரன்_
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக