திங்கள், 29 ஜூன், 2026

அழகோ அழகு!

Minnoottam for  KANMANI RASA (F.B Posting on 29.06.26)



ஏதோ

அனுநாக்கி சாமி வந்து

களிமண் பட்டையில்

கன்னா பின்னானு

கிறுக்கி வச்ச மாதிரில்ல இருக்கு.

சுமேரியனோ 

சிந்து வெளியோ

என்னத்தை வேணாலுமா

கிறுக்கீட்டு போகும்?

உள்ளே

எரியுது கோடி கோடி 

சொக்கப்பனைகள்.

சொற்கற்பனைகள்.

சொல்லுக்குள்ள சொல்லு

குகை உள்ள குகை வச்சு

கூவுறுதுலெ

மொழியின் அம்மணம்

அழகோ அழகு!

_________________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக