செவ்வாய், 23 ஜூன், 2026

வெற்றி மீது வெற்றி வந்து...

 



வெற்றி மீது வெற்றி வந்து...

________________________________________


சும்மா

எதற்கெடுத்தாலும்

வெற்றி வெற்றி என்று

சொல்லிக்கொண்டே

நூறு முறை விழுந்து எழுந்திருங்கள்.

அப்புறம் மூஞ்சியைத் துடைத்துக்கொண்டு

தோல்விகளே

வெற்றியின் படிக்கட்டுகள்

என்று சொல்லிக்கொள்ளுங்கள்.

எழுத்துக்களின் வேந்தே!

ரியாஸ் குரானா அவர்களே!

சுவை பட எழுதுதல்

சுவை பட சொல்லுதல்

ஒன்றே

ஒருவன் நூறு இமயங்களை

தலை மீது சூடுதல் என்று பொருள்.

எழுதுதல் 

என்பது

வெற்றியா? தோல்வியா?

அது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

வெற்றி பெற்ற எழுத்துக்குள் எல்லாம்

ஆயிரம் தோல்விகள்

அமிழ்த்திக்கிடக்கின்றன.

இப்படி படிக்கும் போது

மனது ஒரு சிறு காக்கா இறகு போல

வானத்தில் மிதக்கிறது.

ஒன்று செய்யலாமே!

வெற்றி இஸ் ஈகுவல் டு தோல்வி.

தோல்வி இஸ் அதர்வைஸ் நோன் அஸ் 

சக்ஸஸ்!

அப்பாடா!

கடவுள் வென்று விட்டார்...அதாவது

மனிதன் தோற்று விட்டான்.

மாற்றி கூட சொல்லிப்பாருங்களேன்.

எதுவும் எதுவும் இல்லை.

எதிலும் ஒன்றுமில்லை.

______________________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக