திங்கள், 22 ஜூன், 2026

கத்திரிகோலும் மழிப்பான்களும்

 



ஒரு கணம் நினைத்துப்பாருங்களேன்.

அந்தக் கத்திரிகோலும் மழிப்பான்களும்

இல்லா விட்டால் என்ன ஆகும்?

நாம் மயிர்க்காடுகளுள் தான்

மறைந்து கிடப்போம்.

வயதுகளை நம் கலைக்கு ஏற்றவாறு

செதுக்கி எறியும் இந்த கருவியே

நம்மை கடைசி வரை

தாலாட்டி சீராட்டும் தொட்டில் ஆகும்.

கொஞ்சம் கொஞ்சமாய்

அருகம் புல்லாய் படர்ந்துவரும்

இது திடீரென்று

நம் தலையில் ஒரு இமயமலையையே

தலைப்பாகையாய் தூக்கி

வைத்தது போன்ற பாரத்தை

அமிழ்த்தும்போது

நம்மை விடுவித்து 

ஒரு அநிச்ச மலர் போல‌

வானத்தில் நாம் பறக்க‌

உதவும் அந்த நிபுணர்களே

நம் "ஆபத்துதவிகள்"

நமது வெண்கொற்றக்குடை

அவர்களின் 

ரேசர் விரலிடுக்குகளில் தான்!

________________________________________

சொற்கீரன்.

("வழுக்கைப்பெருமிதம்" பற்றி

உண்மையிலேயே "மயிர்க்கூச்செறியும் படி"

எழுதிய இலக்கிய மன்னர் "ரியாஸ் குரானா"

அவர்களின் கருத்துச்சித்திரம் பற்றிய பகிர்வு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக