செந்தமிழ் நாடெனும்போதினிலே
..........
போதும் நிறுத்து.
இப்படி பாடி பாடி நீ
என்னத்தைக்கண்டாய்?
உன் வீட்டில் நீ பிறந்த தமிழ்ச்
சத்தமே
தீட்டு என்று சொல்லி
மந்திரம் சொன்னார்கள்.
உன் உடன் வாழ்ந்த
தமிழன்களையெல்லாம்
கூறு கட்டி வைத்து
ரத்தம் வழிய வழிய கூறு போட்டு
மந்திரங்கள் சொல்லி
சாமி சொல்லி
சப்பரம் தூக்கி
கழுதைகளாய் பொதிசுமக்க வைத்து
நீ யாருக்கு அடிமை
என்பது கூட
நீ அறியாத வாறு
நீ இருமினால் தும்மினால் கூட
மந்திரங்கள் சொல்லி...
உன் மானம் கிளர்ந்தெழும்
உன் அரைஞாண் கயிற்றில் கூட
கயிறு கட்டி
ஆடுரா "ராமா" பாடுரா "ராமா"
என்று
உன்னை ஆடிப்பாடி குதிக்க வைத்து
விசில் அடிக்க வைத்து
உன் வரலாறு மறந்து
உன் மேன்மை மறந்து
எப்போதோ பிணமாகி விட்ட
உன் சுமையை நீயே சுமந்து கொண்டு
ஆனந்தக்கூத்தாடும் நீ...
நீ யார்?
செந்தமிழ் நாடெனும் போதினிலே
எனும் "போதினிலே" கூட
ஒரு போதையின் மூட்டத்தில்
வஞ்சிக்கப்பட்டு
ஆடுரா ராமா ஆடு!
சினிமா ஜிகினா எனும் மரணக்கிணற்றில்
சர்க்கஸ் விளையாட்டுகளுடன்
ஆடுரா ராமா..ஆடு..
"தமிழா"...
வேண்டாம்
அப்படி அழைக்கப்படவும்
அப்படி அழைக்கவும்
இங்கு யாருக்கும் எந்த
அருகதையும் இல்லை.
எந்த வெட்கமும் இல்லை
__________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக