திங்கள், 1 ஜூன், 2026

ரியாஸ் குரானாவின் "சொற்பாலம்"

 ரியாஸ் குரானாவின் "சொற்பாலம்"

______________________________________


கவிதையின் 

நொட்டை 

நெய்வழிச்சல்களையும்

அதனுள் கோத்துக்கொண்டிருக்கும்

கள்ளச்சங்கிலிகளையும்

அங்குலம் அங்குலமாய்

இதயம் பிளந்து

கொட்டிக்கவிழ்த்திருக்கிறார்.

ஆயிரம் ஆயிரம் கவிதைகளின்

பாற்க்கடலை அல்ல‌

பாழ்க்கடலை

கடைந்து திர்ட்டியிருக்கிறார்.

உவமைகளையும் உருவகங்களையும்

உள்ளுக்குள் உள்ளாய் 

வெளியிலும் வெளியேயாய்

அற்புதமாய்

ஓவியம் தீட்டியிருக்கிறார்.

சர்க்கஸ் கோமாளி ஒருவன்

மிக மிக நுட்பமான வித்தைகளை

கோமாளித்தனமாய்

செய்வதாய்க்காட்டி சிரிக்கவைப்பான்.

ஆனால்

அந்த நுட்பமான வித்தை

வல்லுநர்களுக்கு

ஆசானாய் இருப்பவனே

அவனாகத்தான் இருப்பான்.

அந்த சர்க்கஸின் 

சிங்கம் புலி கரடி மற்றும்

மலைப்பாம்புகளின்

மற்றும்

அன்றாட வசூல்களைக்

குவித்துக்காட்டும்

முதலாளித்தன மேனேஜர் வேலைகளுக்கும்

அவனே தான் எஜமானியாக‌

இருப்பான்.

அப்படி

உலகக் கவிதைகளுக்கெல்லாம்

எஜமானியாக இருக்கும்

ஒரு சொற்கூத்தனும் 

பொருட்செறிவின் ஒரு

பெரும் சக்கரவர்த்தியும் 

இவனே இவனே இவனே தான்.

ஓ!உலகத்து "நோபல் பரிசு"க் கமிட்டியார்களே

இந்தக்கவிஞனை 

ஏன் இன்னும்

உங்கள் பரிசுக்கைவிலங்கில்

மாட்டிக்கொள்ளாமல் விட்டு வைத்திருக்கிறீர்கள்?

உண்மையில் 

நீங்கள் இது வரை சிறப்பித்த‌

கவிஞர்களின்

மொத்தக்கருவூலமே இவன்தான்.

இது

உண்மையிலும் உண்மை.

கவிதைகளின்

ப்ளாக் ஹோல் என்று 

ஒன்று இருக்குமானால்

அதுவும் இவனே.

இந்த கரும்புயலின்

கருவுக்குள்

சொற்களின்

ஆயிரம் ஆயிரம் சூரியன்கள்

தொலைந்து கிடக்கும்.

இந்த கற்பனைப்பிழம்பு

இப்படி சிறைப்பட்டு கிடக்கலாமோ?

அந்த நீண்ட இடைவெளியின்

"சொற்பாலம்"கடக்க‌

இவனிடமே இருக்கிறது

அந்த பொற்சாவிகளின் 

வைரச்சாவிக்கொத்து!

இவன் சொற்பாலம்

கடந்து கடந்து

குதித்து குதித்து நடப்பதில்

உள்ளம் 

மிக மிக களிப்புடன்

ஓர்மை கொண்டு 

இன்புற்றுக்கொண்டே இருக்கிறது.

வாழ்க! வாழ்க!

கவிதைகளின் இந்த‌

யுக சிற்பியன்!

___________________________________________

சொற்கீரன்



ரியாஸ் குரானாவின் "சொற்பாலம்"

______________________________________


கவிதையின் 

நொட்டை 

நெய்வழிச்சல்களையும்

அதனுள் கோத்துக்கொண்டிருக்கும்

கள்ளச்சங்கிலிகளையும்

அங்குலம் அங்குலமாய்

இதயம் பிளந்து

கொட்டிக்கவிழ்த்திருக்கிறார்.

ஆயிரம் ஆயிரம் கவிதைகளின்

பாற்க்கடலை அல்ல‌

பாழ்க்கடலை

கடைந்து திர்ட்டியிருக்கிறார்.

உவமைகளையும் உருவகங்களையும்

உள்ளுக்குள் உள்ளாய் 

வெளியிலும் வெளியேயாய்

அற்புதமாய்

ஓவியம் தீட்டியிருக்கிறார்.

சர்க்கஸ் கோமாளி ஒருவன்

மிக மிக நுட்பமான வித்தைகளை

கோமாளித்தனமாய்

செய்வதாய்க்காட்டி சிரிக்கவைப்பான்.

ஆனால்

அந்த நுட்பமான வித்தை

வல்லுநர்களுக்கு

ஆசானாய் இருப்பவனே

அவனாகத்தான் இருப்பான்.

அந்த சர்க்கஸின் 

சிங்கம் புலி கரடி மற்றும்

மலைப்பாம்புகளின்

மற்றும்

அன்றாட வசூல்களைக்

குவித்துக்காட்டும்

முதலாளித்தன மேனேஜர் வேலைகளுக்கும்

அவனே தான் எஜமானியாக‌

இருப்பான்.

அப்படி

உலகக் கவிதைகளுக்கெல்லாம்

எஜமானியாக இருக்கும்

ஒரு சொற்கூத்தனும் 

பொருட்செறிவின் ஒரு

பெரும் சக்கரவர்த்தியும் 

இவனே இவனே இவனே தான்.

ஓ!உலகத்து "நோபல் பரிசு"க் கமிட்டியார்களே

இந்தக்கவிஞனை 

ஏன் இன்னும்

உங்கள் பரிசுக்கைவிலங்கில்

மாட்டிக்கொள்ளாமல் விட்டு வைத்திருக்கிறீர்கள்?

உண்மையில் 

நீங்கள் இது வரை சிறப்பித்த‌

கவிஞர்களின்

மொத்தக்கருவூலமே இவன்தான்.

இது

உண்மையிலும் உண்மை.

கவிதைகளின்

ப்ளாக் ஹோல் என்று 

ஒன்று இருக்குமானால்

அதுவும் இவனே.

இந்த கரும்புயலின்

கருவுக்குள்

சொற்களின்

ஆயிரம் ஆயிரம் சூரியன்கள்

தொலைந்து கிடக்கும்.

இந்த கற்பனைப்பிழம்பு

இப்படி சிறைப்பட்டு கிடக்கலாமோ?

அந்த நீண்ட இடைவெளியின்

"சொற்பாலம்"கடக்க‌

இவனிடமே இருக்கிறது

அந்த பொற்சாவிகளின் 

வைரச்சாவிக்கொத்து!

இவன் சொற்பாலம்

கடந்து கடந்து

குதித்து குதித்து நடப்பதில்

உள்ளம் 

மிக மிக களிப்புடன்

ஓர்மை கொண்டு 

இன்புற்றுக்கொண்டே இருக்கிறது.

வாழ்க! வாழ்க!

கவிதைகளின் இந்த‌

யுக சிற்பியன்!

___________________________________________

சொற்கீரன்



கவிதை என்ற சொற்பாலத்தைக் கடப்பதெனில்,
மூளைக்குள் குடையை விரித்துக்கொண்டு எப்போதாவது நடந்து பார்த்திருக்கிறீர்களா? சொற்களால் கட்டப்பட்ட இந்தப் பாலத்தில் நடப்பது அப்படியொரு விபரீதமான அனுபவம்தான்! பயணிகளின் பாதுகாப்பை விட, தங்களின் பௌத்திக மீறல் தற்பெருமைக்கே அதிக பட்ஜெட் ஒதுக்கி இதைக் கட்டியிருக்கிறார்கள்.
நீங்கள் இதில் முதல் அடி எடுத்து வைக்கும்போது, பெயர்ச்சொற்கள் மட்டும் கொஞ்சமாவது சிமெண்ட் போல உறுதியாக இருப்பதை உணர முடியும். ஆனால், உஷார்! உரிச்சொற்களின் மீது எக்காரணம் கொண்டும் கால் வைத்துவிடாதீர்கள். ஏனெனில், நவீன கவிஞர்கள் அவற்றின் மீது தாராளமாக வெண்ணெயைத் தடவி வைத்திருக்கிறார்கள்.
ஆங்காங்கே அடுக்கப்பட்டிருக்கும் உருவகங்கள் பார்ப்பதற்கு இரும்புத் தூண்கள் போலப் பிரம்மாண்டமாக இருக்கும். ஆனால், மிதித்தால் அவை வெற்றுப் பஞ்சு மிட்டாய்கள் போல அமுங்கி, உங்கள் செருப்பைக் கவ்விக்கொண்டு விடவே விடாது.
பயணிகளின் வசதிக்காகச் சில தத்துவார்த்தக் குப்பைகளைப் பாலத்தின் நடுவே ஸ்பீட் பிரேக்கர்கள் போலக் குறுக்கே வீசியிருக்கிறார்கள். வழியில் புதிய பொருள்முதல்வாதம், உணர்வுத் தளம் போன்ற கனமான வார்த்தைகள் கிடந்தால், அவற்றைக் கவனமாகத் தாண்டிச் செல்வதே பாதுகாப்பானது.
பார்ப்பதற்குக் கல் பாறை போலத் தோற்றமளிக்கும் அந்த வார்த்தைகளின் மீது ஏறி நின்றால், அவற்றின் எடையற்ற தன்மை காரணமாக நீங்கள் நேராகப் பாதாளத்தில் உள்ள அகவயச் சிக்கலுக்குள் விழுந்துவிடுவீர்கள்.
இதையெல்லாம் தாண்டிச் சென்றால், பாலத்தின் நடுவே ஒரு பெரிய பள்ளம் இருப்பதைப் பார்த்து நீங்கள் பயப்படக்கூடும். இந்தப் பாலத்தைக் கட்டிய முதன்மைப் பொறியாளர், வேறொருவரின் கவிதை வரியைத் திருடித் தன் சொந்தக் கவிதையாகப் பாவனை செய்து, அதனை முக்கியத் தூணாக நிறுவியதே இந்தப் பள்ளத்திற்குக் காரணம்.
அந்தத் திருட்டு வரிக்கு எந்த அசலான உயிர்ப்பும் இல்லாததால், அது இடிந்து விழுந்து இந்த நாசகார வெற்றிடத்தை உருவாக்கிவிட்டது. இந்தப் பள்ளத்தைத் தாண்டுவதற்கு உங்களிடம் கவித்துவ மனமும் கற்பனைத் திறனும் இருக்க வேண்டும். இல்லையென்றால், பாலத்தின் நுழைவாயிலில் உள்ள பெட்டிக்கடையில் மணி நேரத்துக்கு 50 ரூபாய் வாடகையில் ஒரு கற்பனைத் திறனை வாடகைக்கு எடுத்துக்கொண்டு செல்வது விவேகமானது.
இந்தப் பாலத்தில் நடக்கும்போது பயணிகள் அதிக சுமையோடு வருவதை நிர்வாகம் வன்மையாகக் கண்டிக்கிறது. குறிப்பாக, எழுத்தாளர் ஜெயமோகனின் ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட பெருநாவல்களை ஆய்வு செய்யும் பல அத்தியாயங்கள் கொண்ட கனமான ஆய்வேடுகளைச் சுமந்துகொண்டு நடக்கக் கூடாது.
கடந்த வாரம் அப்படி நடந்த ஒருவரின் சுமையால் பாலம் பயங்கரமாகக் குலுங்கி, அந்தப் பக்கங்களின் அதீத அழுத்தத்தாலும் தத்துவச் சுமையாலும் மூன்று விமர்சகர்கள் நதிக்குள் விழுந்துவிட்டார்கள்.
அதேபோல, மோட்டார்சைக்கிளில் இந்தச் சொற்பாலத்தைக் கடக்க முயல்வதும் முற்றிலும் முட்டாள்தனமானது. இங்குள்ள முடிவில்லாமல் நீளும் காற்புள்ளிகளிலும், அரைப்புள்ளிகளிலும் பைக்குகளின் டயர்கள் சிக்கிச் சறுக்குமே தவிர, வண்டி ஒரு அங்குலம் கூட முன்னால் நகராது. அதிலும், நேற்று ஒரு புல்லட் ஓட்டி வந்தவர், ஒரு அடைப்புக்குறிக்குள் சிக்கி இன்னும் வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.
இங்கு பௌதிக விதிகள் எதுவும் வேலை செய்வதில்லை என்பதை நீங்கள் சீக்கிரமே உணர்வீர்கள். நீங்கள் நேராகத்தான் நடந்து கொண்டிருப்பீர்கள், ஆனால் பாலம் திடீரென நனவோடை உத்தி மூலம் பின்னோக்கி வளைந்து, நீங்கள் ஆரம்பித்த இடத்திற்கே உங்களைக் கொண்டு வந்து துப்பிவிடும்.
ஒருவேளை தவறி கீழே விழுந்தால் என்ன ஆகும் என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படாது. மாறாக, நீங்கள் நிரந்தரமாக ஒரு விளிம்புநிலைப் படிமமாக மாறி, எந்த அர்த்தமும் இல்லாமல் காற்றில் மிதக்கத் தொடங்கி, இலக்கியக் கூட்டங்களில் பேயாக அலைய நேரிடும்.
எனவே, இந்தப் பாலத்தைக் கடக்க ஒரே ஒரு வழிதான் உள்ளது. உங்கள் கைகளில் எந்தவிதக் கோட்பாடுகளையும் வைத்திருக்காதீர்கள். அரை கிலோ மௌனத்தை மட்டும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, எந்த இலக்கியவாதியின் கண்ணிலும் படாமல் நைஸாக நடந்து செல்வதே சாலச் சிறந்தது.






ரியாஸ் குரானாவின் "சொற்பாலம்"

______________________________________


கவிதையின் 

நொட்டை 

நெய்வழிச்சல்களையும்

அதனுள் கோத்துக்கொண்டிருக்கும்

கள்ளச்சங்கிலிகளையும்

அங்குலம் அங்குலமாய்

இதயம் பிளந்து

கொட்டிக்கவிழ்த்திருக்கிறார்.

ஆயிரம் ஆயிரம் கவிதைகளின்

பாற்க்கடலை அல்ல‌

பாழ்க்கடலை

கடைந்து திர்ட்டியிருக்கிறார்.

உவமைகளையும் உருவகங்களையும்

உள்ளுக்குள் உள்ளாய் 

வெளியிலும் வெளியேயாய்

அற்புதமாய்

ஓவியம் தீட்டியிருக்கிறார்.

சர்க்கஸ் கோமாளி ஒருவன்

மிக மிக நுட்பமான வித்தைகளை

கோமாளித்தனமாய்

செய்வதாய்க்காட்டி சிரிக்கவைப்பான்.

ஆனால்

அந்த நுட்பமான வித்தை

வல்லுநர்களுக்கு

ஆசானாய் இருப்பவனே

அவனாகத்தான் இருப்பான்.

அந்த சர்க்கஸின் 

சிங்கம் புலி கரடி மற்றும்

மலைப்பாம்புகளின்

மற்றும்

அன்றாட வசூல்களைக்

குவித்துக்காட்டும்

முதலாளித்தன மேனேஜர் வேலைகளுக்கும்

அவனே தான் எஜமானியாக‌

இருப்பான்.

அப்படி

உலகக் கவிதைகளுக்கெல்லாம்

எஜமானியாக இருக்கும்

ஒரு சொற்கூத்தனும் 

பொருட்செறிவின் ஒரு

பெரும் சக்கரவர்த்தியும் 

இவனே இவனே இவனே தான்.

ஓ!உலகத்து "நோபல் பரிசு"க் கமிட்டியார்களே

இந்தக்கவிஞனை 

ஏன் இன்னும்

உங்கள் பரிசுக்கைவிலங்கில்

மாட்டிக்கொள்ளாமல் விட்டு வைத்திருக்கிறீர்கள்?

உண்மையில் 

நீங்கள் இது வரை சிறப்பித்த‌

கவிஞர்களின்

மொத்தக்கருவூலமே இவன்தான்.

இது

உண்மையிலும் உண்மை.

கவிதைகளின்

ப்ளாக் ஹோல் என்று 

ஒன்று இருக்குமானால்

அதுவும் இவனே.

இந்த கரும்புயலின்

கருவுக்குள்

சொற்களின்

ஆயிரம் ஆயிரம் சூரியன்கள்

தொலைந்து கிடக்கும்.

இந்த கற்பனைப்பிழம்பு

இப்படி சிறைப்பட்டு கிடக்கலாமோ?

அந்த நீண்ட இடைவெளியின்

"சொற்பாலம்"கடக்க‌

இவனிடமே இருக்கிறது

அந்த பொற்சாவிகளின் 

வைரச்சாவிக்கொத்து!

இவன் சொற்பாலம்

கடந்து கடந்து

குதித்து குதித்து நடப்பதில்

உள்ளம் 

மிக மிக களிப்புடன்

ஓர்மை கொண்டு 

இன்புற்றுக்கொண்டே இருக்கிறது.

வாழ்க! வாழ்க!

கவிதைகளின் இந்த‌

யுக சிற்பியன்!

___________________________________________

சொற்கீரன்















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக