இந்திரன் ராஜேந்திரன் அவர்களே!!
______________________________________________
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இந்திரன் ராஜேந்திரன் அவர்களே!!
பத்து வயதுக் குட்டிப்பயல்களின்
அம்புலிமாமாக்கதைகள்
இருக்கட்டும்.
உங்களுக்குள்
பம்பரம் விட்டுக்கொண்டிருக்கும்
காலக்குறும்பனை
கயிறு முறுக்கி காதைத்திருகி
கண்டிப்பு காட்டினாலும்
எழுபத்தெட்டு எண்பது என்று
உங்கள் ஓலைச்சுவடிகளில்
பத்து பாட்டும் பத்தாத கற்பனையும்
எட்டுத்தொகையும் எட்டாத வானங்களும்
தொங்கிக்கொண்டிருக்கின்றன
என்று
கோடு காட்டவில்லையா என்ன?
இலக்கியம்
நரைத்துப்போன மீசையிலும்
வீரத்தையும் வீர்யத்தையும்
ரோஜாச்செண்டுகளாய் மூசு மூசு என்று
கிச்சு கிச்சு மூட்டும்
தருணங்களை தவிர்த்து விட வேண்டாம்.
பத்து வயதில்
வாய்க்கால் தண்ணீரில்
பளிங்கின் நிழல் தெரியும்.
முத்திப்போன வயதுகளிலோ
கிளிஞ்சல்கள் திறந்து காட்டும்
முத்து வெளிச்சங்கள் தெரியுமே.
அவற்றின் முறுவல்களிலோ
ஆயிரம் கவிதைகள்!
_________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக