வெள்ளி, 19 ஜூன், 2026

முட்டு சந்தின் சங்கீதங்கள்

 


முட்டு சந்தின் சங்கீதங்கள்

___________________________________________


மாட்டிக்கொண்டாகிவிட்டது.

எட்டு போட முயற்சிக்கும் 

வாகனங்கள்

நுரை தள்ளி புகை கக்குகின்றன.

வேர்வை படபப்பில்

நுரையீரல்கள் கசக்கிப்

பிழியப்படுகின்றன.

ஒரு கவிதையை முடிக்க‌

அல்லது 

முடிச்சுப்போட்டு

முற்று இட்டு

தூக்கிப்போட தவிப்பது போல்...

என்ன 

ஒரு கவிதையை

எழுதி முடிப்பதா?

தீர்த்துக்கட்டுவதா?

சொற்கள் குழம்பியதில்

பளிங்கு தடாகங்களிலேயே

முகம் பார்த்து முறுவல் செய்வது போய்

கண்விழிக்கோளங்களுக்குள்ளேயே

இத்தனை நூல்கண்டு சிக்கல்களா?

__________________________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக