வெள்ளி, 19 ஜூன், 2026

"ரியாஸ் கொரானா" அவர்களின் "பற்பசைப்போர்"



"ரியாஸ் கொரானா" அவர்களின் "பற்பசைப்போர்"

________________________________________________________


உமிக்கரி, வேப்பங்குச்சி

இவற்றின் பரிணாமம்

ஒரு அலுமினியக்குழலுக்குள்

பற்பசையுடன் புருசுமாய்

முடிவுக்கு வந்த போது தான்

நம் கைபேசி யுகமும்

ஏ ஐயின் 

ஃபூரியர் ட்ரான்ஸ்ஃபார்மின்

கணித சங்கிலிப்பாடுகளும்

கை கோத்து 

கை குலுக்கிக்கொண்டிருக்கின்றன.

கொடுத்த காசுக்கு 

கடைசி பிதுக்குத்துளியையும்

விட்டு வைக்க விரும்பாத‌

யுனிட் காஸ்டிங் ப்ரைம் காஸ்டிங்

மற்றும் ஸ்டாண்டர்டு காஸ்டிங்

கார்ப்பரேட் கன்ஸ்யூமர் சர்ப்ளஸ் தியரியையும்

பிசைந்த பொருளாதாரத்தை

உற்றுப்படிக்கும் 

காலை நேரப்போராட்டம் இது! 

செயற்கை மூளையோடு

மல்லுக்கட்டிய மனிதன் 

அவன் காணாமலேயே போய்விட்டான்

என்பதும்

மெஷின் லேங்குவேஜின்

எந்த "பாலிநாமியலுக்குள்"

புதைந்து கிடக்கிறான் என்பதும்

நமக்கு புலனாகவில்லையே.

பல் தேய்த்து 

உணவுக்கூடத்துக்கு போகும்

தகுதி பெறும் வரை

நமக்கு ஆயிரம் பிரச்னைகள் தான்.

பாலைவனத்துக்காரர்களும்

அடுக்கு மாடி நகரத்துக்காரர்களும்

இடையே நடக்கும் 

அன்றாட போர்களுக்கும் இடையே

இந்த பற்பசை தான் காரணமா?

தெரியவில்லையே.

காரணமில்லாமல் இந்த‌

அணுகுண்டுகள் 

மக்களை தின்றுவிடக் காத்திருக்கிறனவோ?

வரலாற்றுப்பேனாக்களுக்கு

மையூற்ற‌

இந்த மனித ரத்தமா வேண்டும்?

கொடுமையிலும் கொடுமை இது.

_____________________________________________

சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக