அது ஒரு தீவு.
_________________________________________________
எல்லாம் அழிந்தது என்று
நம்மீது
முற்றுப்புள்ளி விழுந்தது
எவ்வாறு?
இந்த "அதி அந்த" மொத்தப்படத்தையும்
ஓடவிட்டு
அந்த "முற்றுப்புள்ளி"அத்தியாயத்தின்
"முக தரிசனம்" செய்வதே நமது இப்போதைய நோக்கம்.
அதை
காலத்தின் நீள்கண்டங்களாகப் பகுத்தும்
பார்க்கலாம்.
அல்லது திடீரென்று ஒரி புள்ளியிலிருந்து
நாம் பார்க்கத் துவங்கலாம்.
எப்படித்துவங்குவது?
சரி!
ஒரு விமானம் விபத்துக்குள்ளாகி
கீழே விடுவதிலிருந்து
நாம் திரைப்படமாய் பார்க்க உட்காருவோம்.
அது ஒரு தீவு.
நாம் இப்போது "ஒரு காலவெளிப்பயணத்தின் போது"
விபத்துக்குள்ளாகியிருக்கிறோம்.
பூமியின் பரிமாணத்துக்கும்
இப்போது இங்கு இருக்கும் பரிணாமங்களுக்குமே
வேறுபாடுகள் இருப்பது போன்று
உணர்கிறோம்.
அது மட்டும் அல்ல
நாம் தனியாக உள்ளோமா?
அல்லது
வேறு யாரேனும் இங்கு இருக்கின்றனறா?
என்ற குழப்பத்தில் மூழ்கியுள்ளோம்.
இது "தொலந்து போனோம்" என்ற
ஒரு தொலைக்காட்சித் திரைப்படம்
என்று வைத்துக்கொள்வோம்.
அது கடைசிக்காட்சி தான்.
அப்படியென்றால்
மற்றவர்கள் எங்கே?
அவர்கள் எல்லாம் யார் யார்?
என்று
"குணச்சித்திரங்கள்" வரைந்து வைத்துக்கொண்டு
அவர்கள் இங்கே
அறிமுகம் ஆக வேண்டும் அல்லவா?
அப்புறமும்
அவர்களிடையே தோன்றும்
உணர்வுக் குழம்பியங்களின்
படங்கள் என்னவாக இருக்கும்?
தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக