ஞாயிறு, 7 ஜூன், 2026

இலக்கு

 



ஒருவன் வெற்றி பெருவதற்கு

ஒரு இலக்கு 

குறித்துக்கொள்ளவேண்டும்.

பிறகு இந்த இலக்கை

குறி பார்ப்பதில் தான் 

அவனது வெற்றிப்பயணம் 

தொடங்குகிறது.

அவன் அந்த குறியை 

குறித்துக்கொள்வதில்

ஒரு தவறு நேர்கிறது.

வேறு ஒன்றுமில்லை

அவன் அந்த குறியைத்

தன்மீதே குறி வைக்கிறான்

என்று கொள்ளுவோம்.

அப்போது விளைவு என்ன என்று

அவனுக்கே தெரியாது என்றால்

அவன் அறிவு மிகவும் 

குழந்தைத்தனமானது 

என்று தானே பொருள்.

நோக்கமே தெரியாமல் 

இயங்கும் இந்த தன்மைதான்

மிக மிக ஆபத்தான அறியாமை.

குழந்தைகள் கையில் 

துப்பாக்கியை கொடுத்தால்

அது எங்கே வேண்டுமானாலும்

குறி வைக்கும்.

அது தன் மீதே 

குறிவைத்துக்கொண்டு

விளையாட்டுக்காகக் கூட‌

தன்னைச்சுட்டுக்கொள்ளும்.

தமிழ் நாட்டின் "தமிழை"யே

குறி வைத்து தாக்குபவன் 

அத்தகைய ஆபத்தான‌

அறியாமையில் தானே இருப்பான்.

இப்போது புரிகிறதா

ஒரு தற்குறியின் வேட்டை தன்மீதே

என்று.

அந்த வேட்டைக்காரன் பின்னே

செல்லும் குழந்தைத்தனமானவர்களும்

தற்குறிகள் தான்.

மரத்தின் 

மேல்கிளையிலிருந்து

அடி மரத்தை வெட்டுபவன்

தற்குறியாக இராமல்

வேறு எப்படி இருப்பான்?

அந்தந்த மாநிலங்களை ஆளும் உரிமை 

அந்த மாநிலங்களுக்குத்தான் 

என்பதே

உலக ஜனநாயகக் கோட்பாட்டின்

முக்கிய கூறு.

இதைத் தலைகீழாக 

புரிந்து கொள்ளும் தற்குறி

தன்னைத்தானே வெட்டிக்கொள்ளும்

கோடரியின் காம்பும் கூட‌

தானே என்பதை அறியாதவன்.


_____________________________________

யுகசிற்பியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக