டெல்லியில் கூட்டம்
கூடி
கூட்டிக் கூட்டிக்
கலைந்தார்கள்.
அரக்கம் புயல் வீசுகிறது.
ஆதிக்கம் அகல் நாக்கு கொண்டு
அனைத்தையும் சுருட்டித்தின்கிறது.
ஒற்றுமையாய் எதிர்த்துப்போராட
மாநிலங்களின் ஒட்டுத்துணிக்கட்சிகள்
கொடி உயர்த்திக்கொண்டு தான்
இருக்கின்றன.
மாநில சுயாட்சி தான்
உண்மையான சுதந்திரம் என்று
குரல்கள் ஒன்றுகின்றன.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்
மக்களை அமுக்கிக்கொண்டிருக்கும்
சாதியும் மதமும்
மக்களிடமிருந்து வேறு வேறு அல்ல.
மக்களின் வேர்களின் வேர்கள் தான்.
இதை வெட்டிஅறியும்
அரசியல் சிந்தனை இன்னும்
ஒன்று பட்டு கூர்மை அடையவில்லை.
ஓட்டுகள் தான்
நம் முறிமருந்து என்று
நம்பிக்கொண்டிருக்கிறோம்.
அந்த மருந்தே மீண்டும்
சாதி மத நோய்க்கிடங்காகத்தான்
இருக்கிறது.
கணிப்பொறி யுகம்
கண்விழித்த போதும்
கணிக்கும் அறிதிறம்
மழுங்கடிக்கப்பட்டு தான்
கிடக்கிறது.
ரீல்ஸ்களும்
கைபேசிச்சூறாவளிகளும்
நம் வரலாற்றை
நம் அரசியல் தெளிவை
சிதறடித்துக்கொண்டு இருக்கின்றன.
ஜனநாயக எழுச்சியின்
சிந்தனை வெள்ளமே!
சிலிர்த்தெழுந்து வா!
சில்லறைச்சத்தங்களை
சிதறடித்துக்கொண்டு
எழுந்து வா!
சித்திரத்தை மாற்றும்.
சீற்றத்தோடு எழுந்து வா!
_____________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக