சொந்த ஊருக்கு போகிறார் பாரதிராஜா.
__________________________________________________
புதைக்கப்படவா அங்கு நீ
போகிறாய்?
விதைக்கப்படத்தான் போகிறாய்
என்று
கவிஞர்களின் எதுகை மோனைகளை
நடவு செய்ய
புறப்பட்டு விட்டாய்.
தேனிப்படுகையின்
கிராமத்து
வாய்க்கால்களில் எல்லாம்
தண்ணீர் இல்லை.
கண்ணீர் தான்.
அங்கு நிழல்களாய்
தெரிவது கூட
மரக்கூட்டங்கள் இல்லை.
பால் பாண்டி எனும்
பாரதி ராஜா அவர்களின்
முகங்கள் தான்.
கல்லுக்குள் ஈரம் என்று
ஒரு காதலுக்குள்
ஒரு காதலைக்காட்டினான்.
கரையின் புல்லுக்குள்ளும்
படுத்திருந்த
கனவுகளே அவன் திரைப்படங்கள்.
அவன் ஊர் சொந்த மண்ணுக்குள்
இன்னுமொரு "மண் வாசனை"யின்
படம் எடுப்பான்...அந்த
பட்டிக்காட்டு ராஜாவின் மகுடத்தில்
அந்த மண்ணின் வேர்வையும் உயிர்ப்பும்
இலக்கியமாய் சுடர் காட்டும்.
_________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக