அந்த சேவல்
வேலையற்றுப்போய்
அடி வயிற்றிலிருந்து
கூவி கூவி எழுப்பியது.
வெறுமே
கண்ணை கசக்கி விட்டு
"பெட் காஃபி" குடிக்கவா
எழுப்பியது?
நேற்றைய விடியல்களே
இன்னும் முழுதுமாக
இமை திறக்க வில்லை.
புதிய ஜனநாயகக்கணக்கைத்
துவக்கியதாக
குத்தாட்டம் போட்டீர்களே...
எல்லாம்
பிம்பங்களின் பிம்பங்கள் தான்.
நிழல்கள் கருவுயிர்த்த நிழல்கள் தான்.
அங்கே பாருங்கள்..
மெய்த்திரை கிழிந்து
கந்தலாகிக்கிடக்கிறது.
பொய்த்திரை
பொங்கி பொங்கி
சோப்புக்குமிழிகள்
ஊதிக்கொண்டே இருக்கின்றன.
அந்த சேவல்
வீறு கொண்டு வீறு கொண்டு
கூவிக்கொண்டே இருக்கிறது...
இந்த மொட்டை வெயிலும் கூட.
சவங்கள் குவிந்து கிடக்கின்றன
தூங்குவதாய்
கனவுகள் காண்பதாய்...
இன்னும் இன்னும்...
________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக