விளிம்பு.
விளிம்பு அழகானது.
என் மறைவை கவிதையாக்கும்
அருமையான விளிம்பு அது.
ஆனால்
திடீரென்று அது
எப்படி வெறுமையானது?
இதன் மின்னல் கனவுகள்
மூளியாகிப்போனது.
மொத்தமாய் ஒரு முரட்டுத்தனம்
அந்த மெல்லிய விளிம்பை
தட்டி நொறுக்கியது.
என் மறைவை மீண்டும் உயிர்த்து
அந்த விளிம்புக்கு ஒரு
வேலி கட்ட
என்னை நிமிர்த்திக்கொண்டேன்.
மீண்டும்
ஒரு வயது இரண்டு வயது அல்ல
ஒரு சில நூற்றாண்டுகளையாவது
அதன் மழுங்கல் மட்டைத்தனங்கள்
எல்லாவற்றிலிருந்தும்
கூர்மை படுத்திக்கொள்ள
என்னையே கத்தியாக்கி
என்னையே சாணையாக்கி
பொறி பறக்க
பொறி பறக்க
.............
உம் மேலே சொல்...
பொறி பறக்க பொறி பறக்க
மூச்சுப்பூக்களில்
கவிதைகளாகி
சிலிர்த்துக்கொள்கிறேன்.
_______________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக