வியாழன், 14 மே, 2026

அது எப்படி நிகழ்ந்தது? .

அது எப்படி நிகழ்ந்தது?

ஆச்சரியமா?

அலங்கோலமா?

மழலைகளின் மந்திரக்கோலில்

மலைகளே உருண்டன.

அரசியலின் அரிச்சுவடியெல்லாம்

தேவை இல்லை தான்.

சின்னப்பிஞ்சுகளா

செத்துடுவேன் என்று

மிரட்டின?

இந்தியாவின் சொத்து

குடும்ப பாசம் மட்டுமே.

அதுவுமா

அந்த இல்யூமினாட்டிகளால்

களவாடப்படுவது?

ஜென்ஸி எனும் பிஞ்சு யுகமே!

ஒரு யுகமே பிஞ்சு போகும்

அழிவை நீ 

ஓர்மை கொள்ளவில்லையா?

_______________________________________

சொற்கீரன்.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக