ரீடர்ஸ் கேஃபில் 02.05.26 முகநூலில் எழுதிய
வண்ணதாசன் அவர்கள் கவிதையின் நிழலில்
ஒதுங்கிய என் கவிதை இது.
______________________________________________
மெய்ஞானக் கவிதை மிக அருமை.
விஞ்ஞான மேட்ரிக்ஸில் சொன்னால்
நான்
அல்லது அந்த
ஏதோ பிழம்புக்கு
'காலம்" என்பது
வெறும் அப்ரகடப்ரா கணிதம்
தான்.
கரடு முரடு சிந்தனைகளில்
வேதாந்தமோ சித்தாந்தமோ
அதிலும்
இப்படி "குண்டக்க மண்டக்க"
சோழிகள் போட்டு
பேசிக்கொன்டிருக்கலாம்.
இப்போது
"குவாண்டம்"
எனும் விஞ்ஞான அனக்கோண்டா
நம் உள்ளறிவு வெளியறிவு
மற்றும் வெள்ளை அறிவு
இருட்டு அறிவு
எல்லாவற்றையும் உருட்டி முறுக்கி
கசக்கி...ஆனால்
இன்னும் பிழிந்து விழுங்காமல்
பிளவு பட்ட நாக்கை மட்டும்
காட்டி காட்டி மிரட்டுகிறது.
ஆனாலும்
இவையெல்லாவற்றையும்
தின்று செரித்து சிந்தித்தவற்றை
எச்சமிட்டு
எதுகை மோனையெல்லாம் செதுக்கி
அல்லது
அப்படியே பச்சையாய்
வெளிச்சம் காட்டி
ஒரு கவிதை எழுதி...
எங்கோ ஒரு உச்சியில் போய்
உட்கார்ந்து கொள்ளலாம்.
ஆயிரம் பிரம்மங்கள் வந்து
அங்கே வந்து அந்தக்கவிதையை
"ஸ்பர்சித்து"க்கொள்ளட்டும்.
_____________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக