குதிரை பேரம்
________________________________________
நாற்காலிகளை
வியாபாரம் செய்ய
குதிரைகள் வந்தன.
குதிரைகளுக்கு விலை பேச
எங்கோ ஆட்சி வானத்தில்
வட்டமிடும் கழுகுகள்
பாய்ந்து வந்தன.
மூவர்ணக்கனவு ப்ரோக்கர்களோ
நான்கு வர்ண
வாய்க்கால் வெட்டி
மகசூல் குவிப்பவர்களோடு
கை கோர்த்துக்கொண்டனர்.
சரி போகட்டும்
அந்தக் கொடியில் ஒளிந்து
இந்த கொடிக்கு
கொடி பிடித்தவர்களே
இந்தனை நாளாய்
நம் சுதந்திரத்துக்கு
வர்ண மெட்டு போட்டு
"கச்சேரி" நடத்தினர்.
இன்னும்
அடுத்த நூறாண்டுகளுக்கு
சூலங்களும் கதாயுதங்களுமே
"ராஜ்ய பாரம் சுமக்கும்"
அதாவது
3 சதவீதம் 97 சதவீதம் மேல்
அமர்ந்தே
"குதிரை சவாரி" செய்யும்.
குதிரை பேரங்களின்
மூலவர்கள் எனும் அந்த
ஹயக்கிரீவர்கள்
இந்த பாரத மாதா புத்திரர்களுக்கு
அருள் பாலிக்கட்டும்.
சுகினோ பவந்து ...
சாந்தி சாந்தி சாந்தி ஹி..
______________________________________________
யுகசிற்பியன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக