பதவி ஏற்பு விழா
_________________________________________
இவர் அமைச்சர் ஆனதுலே
எல்லாருக்கும் மகிழ்ச்சி.
அவரே ஒரு தத்துப்பிள்ள தான்.
இப்ப அந்த தத்துபிள்ளைக்கு தத்துப்பிள்ளகளா
இருப்பதுலெ என்ன தப்பு?
இது "தத்துக்கிளிகள்" தத்துவம்.
எங்கே அதிக உயரம் தாண்டணும்
எங்கே குறைச்சலா தாண்டணும்னு தானே
இவங்க "இண்ட்ஸ்ரா" பாலிடிக்ஸ்
பண்ணியிருக்காங்க.
இராமயணத்துலே
சிறுவன் ராமனுக்கு
கண்ணாடியிலே "சந்திரன காட்டித்தானே"
சோறு ஊட்டியிருக்காங்க.
இப்ப அது
அந்த குட்டிப்பிள்ளைகளோட கேம்.
கண்ணாடியிலே
பாசிஸத்தை "பாயாசமா" காட்டி
பெரிசுகள ஏமாத்திட்டுதுங்க!
__________________________________________
யுகசிற்பியன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக