வியாழன், 7 மே, 2026

பண்படுத்துவோம் வாருங்கள்.

 

2கே கிட்ஸ்னா

அறியத்துடிக்கும்

அறிவுக்கண்ணை அகலப்படுத்தி

சிந்திக்கத்துடிக்கும்

அகக்கண்ணை கூர்மைப்படுத்தி

வெள்ளமாய் பெருகும்...

என எதிர் பார்த்தோம்.

அறிவுக்கு பஞ்சமே இல்லை.

ஆனால்

மனிதனுக்கு மனிதன் எனும்

சமுதாய ஓர்மையை

ஓர்ந்துகொள்ளவில்லை.

ஏன்?

வர்த்தகப்பொருளாதாரம்

எனும் பெரும்பூதம்

இளைய தலைமுறைகளை

தின்று செரித்து

வெறும் டிஜிடல் எச்சங்களை மட்டுமே

வாரி இரைத்தது.

சினிமா என்பது நம்மை

பிம்பம் காட்டுவது தான்.

ஆனால் 

நம் வக்கிரங்களை

வண்ணமயமான லேசர் பிழியல்களாய்

நம் மீதே கொப்புளித்தது.

அதனால் நம்

முகம் மறந்து போனோம்.

அகம் சிதைந்து போனோம்.

அறிவின் கூர்மையோ

ஏ ஐ எனும்

உச்சாணிக்கொம்பில்

ஏறிக்கொண்டு

பங்கு மூலதனக் "க்ராஃபிக்ஸ்"களின்

காக்காய் வலிப்புச் 

சித்திரங்களையே தான் 

தீட்டிக்கொண்டிருக்கிறது.

குடியினால் குடியைக்கெடுத்த‌

தீய சக்திகள் என்று

குடித்துக்கொண்டே

ஹைவேக்களில் குத்தாட்டங்களை

அரங்கேற்றுகின்றன‌

அந்த பிஞ்சுப்புயல்கள்.

2கே ப்ளஸ்..ப்ளஸ் களின்

வரலாற்று ஓட்டங்கள்

மீளமுடியாத மைனஸ்களின்

படுகுழியில் விழும்

பேரழிவைத் தடுக்க‌

வரும் தலைமுறைகளை

பண்படுத்துவோம் வாருங்கள்.

எப்படி

புண்படுத்தப்பட்ட போதும்

பண்படுத்துவோம் வாருங்கள்.

_________________________________________

சொற்கீரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக