சனி, 2 மே, 2026

சிந்தி! சீறு!

 

சிந்தி! சீறு!

___________________________________


அணில் குஞ்சுகள்

என்றா அழைக்கிறீர்கள்?

இதை விட‌

அந்த பட்டுக்குஞ்சுகளை

கத்தியால் 

நாலு கீறு கீறியிருக்கலாம்.

தற்குறிகள் 

என்றா சொல்கிறீர்கள்?

கல்வி மழலைகளை இப்படி

கொச்சைப்படுத்துவதை விட‌

சரஸ்வதியின் வீணையை வாங்கி

உடைத்து நொறுக்கியிருக்கலாம்.

போகட்டும் விடுங்கள்.

அந்த சொற்களை இதற்கு மேல்

காயப்படுத்தாதீர்கள்.

சரி..

ஏன் இவர்கள் 

தன் உயிர்களை குழந்தை குட்டிகளோடு

மாய்த்துக்கொள்வோம்

அவர் முதலமைச்சராக வராவிட்டால்..

என்கிறார்களே?

இப்போது நாம் பலமாக‌

ஆழமாக சிந்திக்க வேண்டியவர்களாக‌

இருக்கிறோம்?

இது என்ன கொரோனா 26 ஆ?

இல்லை இல்யூமினாட்டிகளின்

"கல்ட்" கிளர்ச்சிச்சதிகளா?

தமிழ் நாடு அமைதிப்பூங்கா என்பதை

பேரழிவின் சுடுகாடு 

என மாற்றியே தீர வேண்டும் என்ற‌

"பஞ்சதந்திர" சூழ்ச்சிகளின்

திருவிளையாடல்களா?

எப்படியோ

குரங்குகள் குல்லாய்கள் அணிந்து கொண்டு

மரமேறிக்கொண்டன?

குரங்கிலிருந்து மனிதனாக மாற்றும்

பரிணாம‌க்கோட்பாட்டு கேம்ஸ் அடுவதா?

குல்லாயை கீழே எறிந்து விளையாடுவது போல்

நம் ஜனநாயக நாற்காலிகளை

தாறு மாறாய்

தரையில் வீசியெறிந்து காட்டுவார்களா?

இல்லை

தமிழ்நாடு தனை அசுரன் ஆக்கி

சூரசம்ஹார வதம் நடத்திக்காட்டுவார்களா?

தமிழர்களே!

இவை வெறும் புராண வேடிக்கைகள் அல்ல.

தமிழனின் "சுயமரியாதை"யை

காவு வாங்க வந்திருக்கும்

தமிழ்ப்பகைவர்களின் 

வெறி விளையாட்டுகளே ஆகும் இவை.

"அக்னி மீளேம் ப்ரொஹிதம்.."

என்று தான் 

சொல்லிக்கொண்டு வந்தார்கள்.

அவர்கள் கையில் இன்னும்

அந்தக்கொள்ளிக்கட்டைகளே தான்

எரிந்து கொண்டிருக்கின்றன.

தமிழா!எழுச்சி கொள்!

சிந்தி! சீறு!

உன் விடியல் மிச்சங்கள்

களவு போகக் காத்திருக்கின்றன.

_____________________________________________

சொற்கீரன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக