தமிழ் என்றால் என்ன என்று
ஒலிக்கத்தொடங்கினாய்..
மகிழ்ச்சி.
அணில் ஆடு இலை என்றாய்
ஈட்டி என்று குத்தினாய்.
அப்புறமும் "ஊதல்" என்றாய்
பிறகு மடங்கி விழுந்து
இப்படி விசில் அடித்து
தமிழ் மூச்சுக்களையெல்லாம்
உதிர்த்துவிட்டாயே!
தமிழா!
மீண்டும் உன் மூச்சு தான்
நம் எரிமலை வீச்சு.
விழித்துக்கொள்.
நீ விசிலடிச்சான் குஞ்சு இல்லை.
நம் விடியல்களுக்கெல்லாம்
விடியல் வானம் தரும்
செவ்வானம் நீ!
செம்மொழித்தமிழே
நம் துணை.
தமிழ் வாழ்க! தமிழ் வெல்க!
__சொற்கீரன்__
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக