பூவா? தலையா?
போட்டுப்பார்த்தார்கள்.
பூவும் தலையும்
இல்லாதவர்கள்.
பூ விழுந்ததா?
தலை விழுந்ததா?
பேரங்கள் கூச்சல் இட்டன.
நாற்காலிகள்
பரிமாறிக்கொள்ளப்பட்டன.
கணக்குகளுக்குள்
ஒரு கணக்கு இருந்தது.
மாமூல் விடியல்களில்
வானம் கீறிக்கொண்டது.
_______________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக