27.05.26 முகநூலில்"மணற்கடிகை" பற்றி 2016ல் எழுதிய
வண்ணதாசன் அவர்களின் கவிதையிலிருந்து
எழுதிய என் "கவிதைக்கடிகை" இது.
_______________________________________________
இன்னொரு மணற்சிற்பம் அல்லவா
நீங்கள்
அளைந்து பிசைந்து
எழுதிருக்கிறீர்கள்.
இந்த "காலக்கண்ணாடிக்குடுவையில்"
நீங்கள் அடைந்து கொண்டு
அந்த பரல்களில் உங்கள்
சோழிகளைக்குலுக்கிப்போட்டு
கவிதையின் ஒரு "குவாண்டம் மெகானிக்ஸில்"
காலத்தின் காதுகளையே
செல்லமாக திருகிவிட்டு
"காலம் இஸ் ஈக்குவல் டு அகாலம்"
என்று ஒரு அருமையான
"சமன்பாடு" அல்லவா
காட்டியிருக்கிறீர்கள்.
_________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக