ஞாயிறு, 17 மே, 2026

விக்கிரமாதித்தன் அவர்களே!

 



விக்கிரமாதித்தன் அவர்களே!


நறுக் சுருக்

ஊசிகளா

உங்கள் கவிதைகள்!

இதயம் அழுகிறது

கவிதைகள் சிரிக்கின்றன

என்று.

சொல் 

சொல்லை உரித்து

விதையை தேடுகிறது.

கடல்கள்

உங்கள் பேனாவுக்குள்

தாகம் தீர்த்துக்கொள்கின்றன.

அட‌

கடவுளா?

அவனும் தான்

லுங்கி உடுத்திக்கொண்டு

அந்த சிந்து பூந்துறை

ஆற்றங்கரைப் படிக்கட்டில்

நனைந்தும் நனையாமலும்

கிடக்கின்றான்.

யாரோவாய்!

கடவுளை அழைக்கின்ற‌

சுலோகங்கள்

சுருட்டி சுருட்டி

வாரி வாரி 

வாந்தியெடுக்கின்றன.

பெருங்கவிஞனே!

அந்த அவன் 

புலித்தோலை கழற்றி

எறிந்து விட்டு

ஓடி விட்டான்.

என்ன அர்த்தம் சொல்வது?

என்ன புரிவது?

புல்லரித்து 

புழுப்போல‌

துடிப்பதைத் தவிர‌

என்ன செய்ய?

உங்கள் கவிதை

மவுனமாய் மவுனத்தை

கழுவேற்றி கழுவேற்றி

சொல்கிறது.

அந்திச்சிவப்பில்.

___________________________________

சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக