மக்கள்
மக்களையே
தன் காலில் நசுக்கிக்கொண்டு
மக்களுக்கு கையை ஆட்டி
வாழ்த்து சொல்லும்
அரங்கேற்றங்களின்
அமைப்பு
ஜனநாயகம் எனப்படுகிறது.
நூறு சதவீதமும்
மக்களே எனப்படும்
அமைப்பு அரங்கேறுவதையும்
நாம் பார்க்கிறோம்.
பிரம்மாண்ட அணிவகுப்புகளாக
அவை காட்டப்படுகின்றன.
அதையும் பயம் காட்டும்
சர்வாதிகாரம் என்று
ஒதுக்கி விடுகிறார்களே.
எப்படியோ
பாசிசமும் பாயாசமும்
வாழ்த்துக்களோடு
கையாட்டுகின்றன.
சதவீத கணக்கில்
ஆட்சியை நவீனப்படுத்திக்கொள்ளும்
இந்த பொம்மை விளையாட்டில்
"நீயும் பொம்மை
நானும் பொம்மை
நெனச்சுப்பாத்தா
எல்லாம் பொம்மை..
டொய்ங்க்...டொய்ங்க்"
___________________________________
இபியெஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக