திங்கள், 18 மே, 2026

மான்கறி

 எல்லாம் செஞ்ச்ருக்காரு.

ஆமா

எல்லாம் தான்.

அப்றம் எப்படிமா இது?

எங்க பேரந்தான் சொல்லிட்டான்

மாத்தம் வேணுமாம்.

அஞ்சு வருஷம் ஆண்டுட்டாருல்ல‌

இன்னொருத்தருக்கு

சான்ஸ் குடுக்கலாம்லன்னு

சொல்ரான்.

அதனால மாத்திப்போட்டுட்டோம்.

பாருங்கள் குட்டி மீதுள்ள பாசம்

மான்கள் தங்களை

கசாப்பு செய்து கொண்டன.

குட்டிகள் இந்த மான்கறியை

சாப்பிட்டுக்கொள்ளட்டும்.

கொளத்தூரில் 

ஒரு "மைக்"கில் கிடைத்த‌

மரண வாக்குமூலம்.

___________________________________________

சொற்கீரன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக