சனி, 2 மே, 2026

காக்கா நரியின் கத கேளு

 


பாப்பா பாப்பா கத கேளு

காக்கா நரியின் கத கேளு


சட்..நிறுத்துயா

உன் பப்பர்மிட்தனத்தை..

அந்தக்கதை இந்தக்கதை

எல்லாம் இல்ல.

அவரு தான் முதலமைச்சரா 

வரணும்...

அப்டி இல்ல...

அதோடு நிறுத்திக்கொண்டன‌

"கிட்ஸோகிரேசி"

எனும் பிஞ்சு டெமாக்ரேசியா? 

இல்லை 

ஒரு மூர்க்கமான மோபோக்ரேசியா?

ஜென்ஸியின் 

முதல்

அரும்பின் அரும்பு

கையில் வில் அம்பு தூக்கிவிட்டது?

நம்ம தேசம் லேசுப்பட்ட தேசமா என்ன?

கருவுக்குள்ள‌

இருந்தே 

"வியூகம் நுழையவும் வில்லை எய்யவும்"

தெரியும்.

அப்புறம் வெளியே வர அறியா விட்டாலும்

கவலையில்லை.

விளயாட்டுக்கும் வீரத்துக்கும்

மயிரிழை தான் என்றாலும்

அந்த "மயிரிழை" ஊஞ்சல்களே

சுகமானது...ரம்மியமானது...

இந்த விசில் ஒலிக்குள்

நம் மண்ணே 

கவிழ்ந்து விடுமோ என்றெல்லாம்

கவலையா?

தேவையில்லை.

இவர்கள் இப்படி அரக்கு மாளிகைகளின்

சினிமாக்கள் காட்டியே

இனிமாக்கள் கொடுப்பார்கள்.

மக்களே 

உங்கள் சிந்தனையை 

கூர் தீட்டவேண்டிய தருணம் வந்து விட்டது.

பொம்மைக்கல்யாணம் போல்

நம் நாட்டு 

ஜனநாயகத் திருவிழாக்கள் ஆகிப்போயின.

சுடுபவனா?

துப்பாக்கியா?

எது பொம்மை?

சிந்தியுங்கள் மக்களே!

சிந்தியுங்கள்!

________________________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக