வெள்ளி, 1 மே, 2026

02.05.26 முகநூலில் வண்ண‌தாசன் அவர்களின் கவிதை

 

02.05.26 முகநூலில் ஒரு கல்யாணவீட்டு
சாப்பாட்டுக்கூடத்திலும் வண்ண‌தாசன் அவர்களுக்கு
கிடைத்தவை இத்தனை அருமையான தருணங்களா
என்று வியந்த என் கவிதை இது.
___________________________________________________
மனசாட்சிப்பறவை
எங்கெல்லாம் கூடு கட்டிககொண்டு
இறக்கை அடித்துக்கொண்டு
தன்னை பிரகடனப்படுத்துகிறது
அதன் கீச்சுக்குரலில்
கீறல் விழுந்த ரிக்கார்டுகளாய்
தன் முனைப்புகளின்
கழிநெடிலடி எண்சீர் விருத்தங்களை
அரங்கேற்றுகிறது என்பதை
எவ்வளவு நுட்பமாய்
உங்கள் கவிதையில்
"குறும்படம்" எடுத்திருக்கிரீர்கள்?
அதில்
ஆஸ்கார் காரர்களுக்கு
தெரியாத கோணங்கள்
எத்தனை?எத்தனை?
வண்ணதாசன் அவர்களே!
________________________________________
சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக