முத்தான முத்தல்லவோ
_____________________________________
(கலைஞரின் செல்வர் மு க முத்து
அவர்கள் மறைவிற்கு அஞ்சலி)
"பிள்ளையோ பிள்ளை" என்று
வலம் வந்தவர்.
ஆகா ! இன்னொரு எம் ஜி ஆர்
என்று
திரை வெளிச்சத்தின்
புதிய பரிணாமச்சுடரில்
புடம் போட்டு பூத்து வந்தவர்.
எங்கே சறுக்கியது?
எப்படி சறுக்கியது?
என்பதன் உள் வரலாறு
இறுதியில்
தி மு க எனும்
ஆலமரம்
ஒரு புதிய கிளையை
நீட்டிக்கொண்டு வந்தது.
அது விழுதும் அல்ல
வேரும் அல்ல.
ஆனால் பொன்னான திமுக விற்கு
"மூலாம் பூசப்பட்டது" போல் வந்து
திராவிடம் எனும் ஆழ்நெருப்பு
வெறும்
மத்தாப்பாக வந்து
தமிழ் மண்ணின் உயிர்ச்சுடர்
மங்கியே போனது.
முத்தான முத்தல்லவோ என்று
கொண்டாடிய கலைஞர்
மனம் ஒடிந்து போனார்.
ஏன்?
அந்த முத்துப்பறவை
அரிதார திமுகவின்
கூண்டுக்கிளியாகிப்போனது.
அந்த மூத்த புதல்வர் இழப்பினால்
எல்லோருக்கும் இப்போது
கண்ணீரின் கன மழை.
இது ஒரு மாபெரும் சோகம்.
கலைஞர் வீட்டினருக்கு
நம்
கனத்த உள்ளத்தின்
ஆழ்ந்த இரங்கல்கள்.
_____________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக