அகழ்நானூறு 100"
_________________________________
சொற்கீரன்
கறை அணற்சேவல் மனைஉறைக் குரீஇ
வரிச்சிறை வாரணம் பேடையோடு தழீஇ
நொச்சிக்குரல் அன்ன ம்யில் பீலி சூடிய
மயிர்க்கண் முரசம் அதிரொலி அயர்ந்து
வெளிப்பட துணியா வெஞ்சமர்க் காலை
ஆரிலை வெஃகம் ஏந்தல் மறவர்
ஆறலை அஞ்சுரம் ஆறுபடுத்த போழ்தின்
நெடு ஒலி மலியும் இஞ்சிசேர் ஊர!
நின் வாணுதல் பொறியும் பூத்த பசலை
மயக்குறு செய்யும் கொடுஞ்செயல் தவிர்மதி
நின் கொய்சுவல் நுண்மா கதழ்பரி கலித்தே
விரைமதி பூழிபடர் வழியும் நன்றே எதிர்தரும்
உதுக்காண் அவள் வளைஇறை நெகிழ்தர
இழியும் சுடுவிழி அஞ்சிறை நீரே.
_________________________________________________
சொற்கீரன்
(புறம் 318 பெருங்குன்றூர் கிழார்) Source
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக