ஊற்றித்தந்த சொல்லருவி...
--------------------------------------------------------------
அருமை! அருமை!
கவிச்செல்வா அவர்களே!
உங்கள்
"திருமண நாளை"யையே
தொலந்து போகாத
வாழ்வின் திறவு கோல் ஆக்கி
இல்லற இன்பத்தின் அன்புக்
கிலு கிலுப்பை ஆக்கி
மீண்டும் இரு மழலைகள் போல்
பால் உள்ளம் பொங்கும்
கவிதை ஊற்றில்
ஊற்றித்தந்த சொல்லருவி
திகட்டாத தேனருவி தான்
எங்களுக்கு.
வாழ்க! வாழ்க! நீவிர் வாழ்க!!
நீடூழி!!
___________________________________________
அன்புடன் வாழ்த்தும்
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக