ஒரு மனக்குரளி பேசுதுடா...
___________________________________________
ஓட்டுன்னா
என்ன தெரியுமா?
ஜனநாயகத்துக்கும்
சுவாசம் உண்டு.
ஓர்மை உண்டு.
அட!
வலியும் உண்டுடா முண்டம்.
அது தெரிஞ்சு
அதை பயன்படுத்தணும்டா.
இந்த் மண்ணுக்குள்
ஓடும் நெருப்பின் நரம்புகள்
வெடித்துச்சிதறுவதுண்ணா
எது தெரியுமா?
இதுக்குள்ளவும்
வாழ்ந்து பார்த்து தான் ஆகவேண்டும்
என்ற
மனிதத்தின் துடிப்புடா அது!
அத அவிச்சுத்திங்கறத்துக்குண்ணே
ஒரு வன்மக்கும்பல்
அமுக்கிக்கிட்டே இருக்கே
அத ஒடச்சு
சல்லி சல்லியா ஆக்கணும்டா.
அந்த சித்துளியும் சம்மட்டியும் தாண்டா
ஓட்டு.
அத எச்சிக்கலத்தனமா
காசுக்கு குடுத்துட்டு
என்ன....த்துகுடா
நீ இருக்கே?
ஒறைக்குதா உனக்கு?
யோசிடா...யோசிடா.
_______________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக