ஞாயிறு, 13 ஜூலை, 2025

ந.முத்துக்குமார்.

 

 
பொது உடன் பகிர்ந்தது
ந.முத்துக்குமார்.
__________________________

எல்லாக் கவிதைகளுக்கும்
ஒரு மொழி பெயர்ப்பின் பெயரே
முத்துக்குமார்.
புல்லும் புழுவும்
பச்சைப்புல்லில் கவிதை உருப்பெற‌
இவர் வீட்டு வாசற்சுவடுகளில்
படரும்..ஊரும்.
தொட்டாற் சிணுங்கிக்
கவிதையை
தொட்டு தொட்டு எழுப்பியவர்.
கிராமத்துச் சுவர்களில்
வட்ட வட்டமாய்
சாணி தட்டிக்கொண்டு
வந்த புதுக்கவிதை
இவரிடம் அவை
அசோசகக்கரங்கள் என்று
வம்புக்கு இழுத்தன.
மனிதன் மணம் எங்கும்
மின்காந்தம் பாய்ச்சும்.
இவரிடம் மின்னல் வெள்ளத்தை
அது
கோப்பை கோப்பையாய்
கொட்டியது.
இவர் பேனாவில்
நிரந்தரக்கூடு செய்தார்.
குயில்களின் இச் இச்சுகளில்
கவிதைகள் பின்னித்தந்தார்.
கோடம்பாக்கத்து
ராட்ச்சச‌க்காமிராக்கள்
இவர் எழுத்துக்களையே
தின்று தின்று
வண்ண உலகங்களை
கிலு கிலுப்பைகளாய் குலுக்கின.
சொற்பெருக்குகளில் சொட்டி சொட்டி
உயிரின் வண்ண வண்ணக்குமிழிகளை
ஊதி ஊதி விளையாடத்தந்தவன்
அந்த மஞ்சள் நிறத்தை மட்டும்
அலட்சியம் செய்தது ஏன்?
மஞ்சக்காமாலை என்று
கொச்சைத்தனமாய்
கொத்தித்தின்றதே அவனை அது?
நமக்கு
மாபெரும் இழப்பு
எனும் கவிதை
பேனா இல்லாமல் காகிதம் இல்லாமல்
அவன் தந்த போது
இந்த விருதுகள் தான்
வரட்டிகளாய் ஏந்தி தீபம் தந்தன.
உணர்ச்சிக்கவிதையை எழுதிக்காட்ட‌
உனக்கு உன் மரணமா கைக்கு கிடைத்தது.
கைக்கு எது கிடைத்தாலும்
உனக்கு
அது உலகத்தின் ஓரப்பார்வைகள்
கண்ணடித்து தருவது தான்.
படு பாவி
அதில் எப்படி அந்த‌
எமன் உன்னை விழுங்கித் தீர்த்தான்.
________________________________________________
சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக