செவ்வாய், 29 ஜூலை, 2025

பொழிக!பொழிக!

 

எங்கள் எல் ஐ சி தோழர் சுவாமிநாதன் அவர்களுக்கு

எங்கள் செம்பாட்டுகள்!

___________________________________________________


தோழர் சுவாமிநாதன் அவர்களே

உங்களுக்கு பொழிக! பொழிக!

எங்கள் மனங்கனிந்த 

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

தோழமையின் மூச்சுக்குள் மூச்சாய்

பாட்டாளி வர்க்கத்தின் பாட்டுக்குள் 

பாட்டாய்

சாதி வர்ணங்களை தகர்த்தெறியும்

சிவப்பு பூபாளத்தின்

செவ்வியல் பூத்த விடியல் குரலாய்

முழங்குகின்ற தோழரே!

உங்கள் இதயம் இயங்குவதில்

எங்கள் இதயங்களும் 

"கோஷம்" எழுப்பும் எப்போதுமே!

வாழ்க! வாழ்க! பாட்டாளிகள்!

வெல்க வெல்க அவர்களின்

செம்பாட்டுகள்!

_________________________________________

செங்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக