வெள்ளி, 18 ஜூலை, 2025

அகழ்நானூறு "99"

 

("மாற்பித்தியார் 252..புறம்) source.


அகழ்நானூறு "99"

_____________________________


தில்லை அன்ன புல்லென் சடையோடு

வரிமரம் தழீஇ வழங்கு நீடிலைக் கண்ணே

புள்ளி நீழல் பொறி மூசு கழையின்

அடுக்கம் சிலம்பிய வேடுவன் எய்யா

மறை அம்பு தீண்டிய கூர்ங்கண் 

கொல்லிய மலை கிழவோன் மள்ளன்

சொல்வலை வேட்டுவன் ஒலிகிளர் மாலை

மயக்கிய தென்னே நோன்றல் ஆற்றா

மணிநிற முன்றில் நொச்சிக்குரலின்

மெல்லிய படுகை என் இறைவளை

நெகிழ்த்தும் நெகிழ்த்தும் யான்

எற்றைத்திங்கள் எரிவெள் நிலவு

அனல் படும் தண்ணினும் நீர்த்தே

அளியள் யானே விழிநீர் போர்த்து

கறங்கும் வெள்ளிய அருவியின் ஆர்த்தே.


__________________________________

சொற்கீரன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக