வியாழன், 10 ஜூலை, 2025

ஓட்டாற்றுப்படை -2


ஓட்டாற்றுப்படை -2

-------------------------------------------------

உன் 

"ஓட்டாஞ்"சல்லிகள்  

சரசரக்கின்ற ஆறு இது.

ஆற்றின் தடம் தொலைந்தே

போனது.

மந்திரக்கும்பல் 

அடித்த கொள்ளையில் 

நம் முகங்கள் சிதைந்தே போயின.

சில்லறைக்கூச்சல்களின் கொசுக்கள் 

மொய்த்ததில் 

நோய்கள் மட்டுமே மிச்சம் ஆனது.

நாலு வர்ணப்  பேய்கள் ஆட்டத்தில் 

வழியும் தொலைந்தது.

விழியும் தொலைந்தது.

தொலைந்ததை தேடு.

அதுவே உன் தேர்தல்.

விழித்திடு தமிழா! விழித்திடு!

--------------------------------------------------------------

சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக