மூளைக்கு வேலை?
____________________________________________
என்னது
மூளைக்கு வேலையா?
வேண்டாம்
அதை மழுங்கச்செய்.
அது சைத்தான்.
கடவுள் அலறுகிறார்.
"எனை நம்புபவர்கள் மட்டுமே
இந்த பூமிக்கு உரியவர்கள்.
மற்றவர்கள்...
ஆம் தேவையில்லை.
அங்கே "அச்சம்" எனும்
கசாப்புக்கத்தியையே
என் உருவம் ஆக்கு"
மதங்களில் மிரண்ட மனிதன்
"ஜப தவம்"மற்றும்
மூளை மழுங்கிய கபால தாங்கிகளாகவே
உறைந்து போன சித்தாந்தங்களை
தீப்பந்தங்களாக ஏந்தியவர்களாகவே
வலம் வந்தார்கள்.
இதன் பரிணாமமே
சாதி மதங்கள் மற்றும்
நிறவெறி..இனவெறிகள்...
விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்கள்
"குளூகோஸ் ப்ரோடீன்கள் தான்
உயிர் நீட்டத்தை மடக்குகிறது.
அது மூளை நரம்பு செல் வளர்ச்சியை
முடக்குகிறது" என்கிறார்கள்.
GLUT4...இதுவே அந்த "புரதம்"
இந்த "ஆத்மீக டையபடீஸ்"தான்
மனிதம் எனும் மலர்ச்சிக்கு
முட்டுக்கட்டை.
அது இனிமையை "ஸ்த்தோத்திரம்"
செய்து கொண்டே இருக்கிறது.
"ஜனனம் மதுரம்.
மரணம் மதுரம்"...
என்று
சப்பளாக்கட்டைகளில்
நசுங்கிக்கிடப்பார்கள்.
கடவுள் எனும் தங்க சங்கிலியை
அணிந்து கொள்ளுங்குள்.
அது உங்கள் கழுத்துக்களை
நெறிக்கும் முன்
கழற்றியெறியுங்கள்!
ஆமென்.
உங்களை கடவுள் காப்பாற்றுவாராக!
__________________________________________
சொற்கீரன்.
A Novel Discovery Hints At Why We Stop Producing New Brain Cells — And What We Can Do About It
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக