மடியில் ஒரு "உதயசூரியன்"
_________________________________________
துக்கம் தான்.சோகம் தான்.
கலைஞர் தன் மூத்தபுதல்வர்
மு க முத்து அவர்களை
தன் மடியில்
ஒரு குட்டி உதய சூரியனாகத்தான்
பார்த்தார்.
அப்படி ஒரு முகப்பொலிவு உடையவர்
அவர்.
நான் ஆணையிட்டால் என்று
இந்த தமிழ் நாட்டை
அவர் மூலம்
ஒரு சிறந்த எழுச்சிமிக்க
தமிழ் மாநிலம் ஆக்க நினைத்தார்.
ஆனால்
அது எம் ஜி ஆர் அவர்களின்
வெற்றி நிழல்களையெல்லாம்
விழுங்கி விடுமோ என்ற
அச்சமே
இங்கு தி மு க வை
துண்டு படுத்தி விட்டது.
ஆனால் மு க முத்து அவர்களும்
ஒரு சினிமா செட் கட் அவுட் மட்டுமே
என்று நின்று கொண்டு விட்டார்.
சொல் சிந்தனை இயக்கம்
எல்லாம்
கலைஞருக்கு
தமிழின் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் தான்.
இந்த சிகரத்தை தொட வேண்டும்
என்ற ஆர்வமும் உந்துதலும்
இல்லாதவராக
மதுவின் ஆட்சிக்குள்
தன்னை மறைத்துக்கொண்டு விட்டார்
மு க முத்து .
அது கலைஞருக்கு மட்டும் அல்ல
அவரது குடும்பத்தார்களுக்கு கூட
ஒரு பெரிய வேதனையும் சோகமும் ஆகும்.
அரசியல் "பாற்கடலில்"
விளைந்த நச்சு மரம் தானே அந்த
"டாஸ்மாக்".
இதில் மிகப்பெரிய "முரணாக"
மு க முத்து அவர்கள்
மாற்றான் தோட்டத்து மல்லிகையின்
மணத்துக்குள்ளேயே
மடிந்து கொண்டு கிடந்தார்.
ஆம்.
அ தி மு க தலைவர்
புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின்
பாசத்துக்குள் " இடறி " விழுந்தவர்
மீண்டும் எழுந்து நிற்கவே இல்லை.
அவர் வெறும் நிழல் உருவமாகவே
மங்கிப்போனார்.
இப்போது திரு மு க முத்து மறைவு
கலைஞர் குடும்பத்தில்
இன்னும் ஒரு ஆற்ற முடியாத சோகம்
ஆகி விட்டது.
சமையல்காரன் என்ற படத்தில்
அவர் "பாடி நடித்த" அந்த
பாத்திரம் இன்னும் நமக்குள்
எதிரொலித்துகொண்டு தான் இருக்கிறது.
"சொந்தக்காரங்க எனக்கு
ரொம்பப் பேருங்க..."
என்ற
அவர் மிகிழ்ச்சி மிக்க பாடல் வரிகள்
பொருள் பொதிந்தது தான்.
ஆம்.
அப்போது அந்த கலைஉலகம்
அவருக்கு தமிழ் நாட்டு மக்களையெல்லாம்
பாசத்துடிப்பு மிக்க
சொந்தக்காரர்கள் போல் தான்
ஆக்கி விட்டிருந்தது.
அவரது மறைவு
நம் முதலமைச்சர் மாண்பு மிகு
ஸ்டாலின் அவர்களுக்கு
ஒரு திடுக்கிடும் அதிர்ச்சி மிக்க
சோக நிகழ்வு ஆகும்.
அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும்
நம் மனம் ஆழ்ந்த இரங்கல்களை
தெரிவித்துக்கொள்கிறோம்.
__________________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக